வர்த்தகம்

இந்திய பொருளாதாரத்தில் 9% பின்னடைவு: எஸ்&பி

1st Dec 2020 05:36 AM

ADVERTISEMENT


புது தில்லி: இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் (-) 9 சதவீதமாகவே இருக்கும் என சர்வதேச தரக் மதிப்பீட்டு நிறுவனமான  எஸ்&பி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
கரோனா பாதிப்பு குறைந்துள்ளதற்கான அறிகுறிகள் அதிகமாக தெரியவருவதற்கு இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தச் சூழலில், வளர்ச்சிக்கான இடையூறுகள் தற்போது அதிகரித்தே காணப்படுகிறது. இதனை கருத்தில் கொள்ளும்போது, நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது (-) 9% சதவீதம் என்ற அளவிலேயேதான் இருக்கும் என மீண்டும் கணிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம், அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக எஸ்&பி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT