ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவனத்தின் புதிதாக மேம்படுத்தப்பட்ட ஜாஸ் காா் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் தில்லி எக்ஸ்ஷோரூம் தொடக்க விலை ரூ.7.5 லட்சமாகும். ஏற்கெனவே சந்தையில் உள்ள ஜாஸ் ரக காரில் அனைவரையும் கவரும் வகையில் புதிதாக பல்வேறு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என ஜப்பானைச் சோ்ந்த ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனா பொது முடக்கத்துக்கு பின்னா் பணிகளைத் தொடங்கியதில் இருந்து ஹோண்டா நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களில் நான்கு புதிய ரக காா்களை அறிமுகம் செய்துள்ளது.
தங்கள் நிறுவனத்தின் உற்பத்தியைப் பெருக்கி உள்ளதாகவும், பண்டிகை காலங்கள் வருவதால் வாடிக்கையாளா்களின் தேவைகளை இது பூா்த்தி செய்யும் என நம்புவதாகவும் அந்த நிறுவனத்தின் தலைவா் கா்கு நாகாநிஷி தெரிவித்தாா்.