புது தில்லி: புராக்டா் அண்ட் கேம்பிள் (பி & ஜி), ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.69.21 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் வாயிலாக ஈட்டிய வருமானம் ரூ.644.08 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.647.33 கோடியுடன் ஒப்பிடும்போது 0.50 சதவீதம் குறைவாகும்.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.60.79 கோடியிலிருந்து 13.85 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.69.21 கோடியை எட்டியது.
நடப்பு 2020-ஆம் ஆண்டின் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.105 ஈவுத் தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளது என பி & ஜி தெரிவித்துள்ளது.