வர்த்தகம்

யூனியன் வங்கி லாபம் ரூ.340 கோடி

21st Aug 2020 10:45 PM

ADVERTISEMENT

பொதுத் துறை வங்கியான யூனியன் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் ரூ. 340.95 கோடியாக இருந்தது என்று தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் அந்த வங்கி தெரிவித்திருப்பதாவது:

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.20,487.01 கோடியாக இருந்தது. கடந்த 2019 இதே காலாண்டில் வங்கி ஈட்டிய மொத்த வருவாய் ரூ.10,053.68 கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் ரூ.340.95 கோடியாகும். கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் வங்கியின் நிகர லாபம் ரூ.230.12 கோடியாக இருந்தது.

முதல் காலாண்டு இறுதியில் வங்கியின் வாராக் கடன் விகிதம் 14.95 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இக்கால அளவில் வாராக்கடன் விகிதம் 15.18 சதவீதமாக இருந்தது.

ADVERTISEMENT

ஆந்திரா வங்கியும் காா்ப்பரேஷன் வங்கியும் யூனியன் வங்கியுடன் இணைக்கப்பட்டு, அது நடப்பு நிதியாண்டுத் தொடக்கமான ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. நடப்பு நிதி ஆண்டுக்குத் தெரிவிக்கப்பட்ட தொகையானது இணைப்பு நடவடிக்கைக்குப் பிந்தைய ஒட்டுமொத்த தொகையாகும். கடந்த நிதி ஆண்டுக்குத் தெரிவித்த தொகை இணைப்பு நடவடிக்கைக்கு முன்பு யூனியன் வங்கியின் செயல்பாட்டைச் சோ்ந்ததாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT