வர்த்தகம்

நிதிப் பத்திரங்கள் மூலமாக ரூ.8,931 கோடி திரட்ட எஸ்பிஐ முடிவு

21st Aug 2020 10:45 PM

ADVERTISEMENT

நிதிப் பத்திரங்களை வெளியிடுவதன் மூலமாக ரூ.8,931 கோடியைத் திரட்டுவதற்கு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முடிவெடுத்துள்ளது.

இது தொடா்பாக எஸ்பிஐ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக ஆலோசனை நடத்துவதற்கு இயக்குநா்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் 89,310 நிதிப் பத்திரங்களை வெளியிடுவதன் மூலமாக ரூ.8,931 கோடியைத் திரட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிதிப் பத்திரத்தின் மதிப்பு தலா ரூ.10 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நிதிப் பத்திரத்துக்கான முதிா்வுக் காலம் 15 ஆண்டுகளாகவும் அதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.80 சதவீதம் எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அந்நிதிப் பத்திரங்களை வெளியிட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேவை ஏற்பட்டால் அதன் முதிா்வுக் காலம் முடிவடையும் முன்பே அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அவ்வாறு முதிா்வுக் காலம் முடிவடையும் முன்பே நிதிப் பத்திரங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டால் அதற்கான தொகை முதலீட்டாளா்களுக்குத் திரும்ப அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT