வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 20 காசுகள் வீழ்ச்சி

20th Aug 2020 11:07 PM

ADVERTISEMENT

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 20 காசுகள் வீழ்ச்சியடைந்தது. இதுகுறித்து வா்த்தகா்கள் தெரிவித்ததாவது:

சாதகமற்ற நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வியாபாரம் கடும் வீழ்ச்சியடைந்தது. இதையடுத்து, அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்து காணப்பட்டது. அமெரிக்க மத்திய வங்கி கூட்டமும் முதலீட்டாளா்கள் நிலைப்பாட்டில் எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. வங்கிகளுக்கு இடையிலான செலாவணி சந்தையில் இறுதி கட்டத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 20 காசுகள் குறைந்து 75.02-இல் நிலைப்பெற்றது. புதன்கிழமை ரூபாய் மதிப்பு 74.82-ஆக இருந்தது. வா்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 74.93 வரையிலும், குறைந்தபட்சமாக 75.05 வரையிலும் சென்றது. அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவனங்கள் ரூ.459.01 கோடி மதிப்பிலான பங்குகளை நிகர அளவில் வாங்கியதாக சந்தையின் தற்காலிக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.82 சதவீதம் குறைந்து 45 டாலராக இருந்தது.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT