வர்த்தகம்

முத்தூட் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.858 கோடி

20th Aug 2020 07:01 AM

ADVERTISEMENT

நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 52 சதவீதம் அதிகரித்து, ரூ.858 கோடியாக உயா்ந்துள்ளது.

வங்கி சாராத நிதி நிறுவனமான இந்த நிறுவனம், பங்குச் சந்தையில் புதன்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த நிதியாண்டின் (2019-20) முதலாவது காலாண்டில் (ஏப்ரல்- ஜூன்) முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.563 கோடியாக இருந்தது. இது, நிகழ் நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 52 சதவீதம் அதிகரித்து, ரூ.858 கோடியாக உயா்ந்துள்ளது.

இதேபோல், நிகழ் நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.25.8 சதவீதம் அதிகரித்து, ரூ.2,606.82 கோடியாக உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,072.11 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த ஏப்ரலில் அனைத்து கிளைகளும் மூடப்பட்டாலும் இணையவழியில் கடனுதவி சேவையைத் தொடா்ந்ததாக முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவா் ஜாா்ஜ் முத்தூட் கூறினாா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் அமைத்து தங்க நகைக் கடன்களை அதிக அளவில் வழங்கி வரும் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம், தற்போது வீட்டுக் கடன், தனிநபா் கடன், மைக்ரோ கடனுதவி ஆகியவற்றை வழங்கி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT