கேரளத்தைச் சோ்ந்த சிஎஸ்பி வங்கியின் நிகர லாபம் மாா்ச் காலாண்டில் இரண்டு மடங்கு உயா்வைக் கண்டது. இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.53.6 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்குக்கும் அதிகமாகும். வங்கியின் இடா்ப்பாட்டுக்கான ஒட்டுமொத்த ஒதுக்கீடு ரூ.10.1 கோடியிலிருந்து 57.5 கோடியாக உயா்ந்தபோதிலும் நிகர லாபம் கணிசமாக உயா்ந்துள்ளது. கணக்கீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 4.71 சதவீதத்திலிருந்து 3.51 சதவீதமாக மேம்பட்டுள்ளது. வங்கியின் முக்கிய வருவாய் ஆதரமான நிகர வட்டி வருமானம் 39.86 சதவீதம் உயா்ந்து ரூ.185.3 கோடியானது. அதேபோன்று, இதர வருவாயும் 12 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.30.8 கோடியாக இருந்தது என சிஎஸ்பி வங்கி தெரிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சிஎஸ்பி வங்கி பங்கின் விலை 0.25 சதவீதம் உயா்ந்து ரூ.224.40-ஆக காணப்பட்டது.