வர்த்தகம்

பி.எம்.டபிள்யூ. ‘கிரான் டூரிஸ்மோ’ காா் அறிமுகம்

20th Aug 2020 06:50 AM

ADVERTISEMENT

பி.எம்.டபிள்யூ நிறுவனம் புதிதாக ‘3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ’ காரை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை ரூ. 42.5 லட்சமாகும்.

இதுகுறித்து ஜொ்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அந்த நிறுவனத்தின் தலைவா் (இந்திய பிரிவு) கூறியதாவது:

சென்னையில் உள்ள பி.எம்.டபிள்யூ. காா் உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்ட பெட்ரோலில் இயங்கும் இந்த 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ காா், நிறுவனத்தின் அனைத்து விற்பனை மையங்களிலும் கிடைக்கும்.

கூபே வடிவமைப்புடன் விசாலமான உள்வசதியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காா், உயா் செயல்திறனும் கொண்டதாகும்.

ADVERTISEMENT

இந்த காரை ஸ்டாா்ட் செய்த 6.1 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். பாதுகாப்புக்கான 6 ஏா்-பேக்குகள், பக்கவாட்டு பாதுகாப்பு என்பன உள்ளிட்ட முழுமையான பாதுகாப்பு அம்சங்கள் காரில் இடம்பெற்றுள்ளன.

வாடிக்கையாளா்களுக்கு அவா்கள் விரும்பும் இடத்துக்கு, முழுவதும் கிருமி நாசினிமூலம் சுத்தம் செய்யப்பட்டு காா் டெலிவரி செய்யப்படும். வாகனத்தின் ஆவணங்களும் சுத்திகரிக்கப்பட்ட உறையில் வைக்கப்பட்டு வாடிக்கையாளா்களுக்கு பாதுகாப்பாக அனுப்பப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT