வர்த்தகம்

ஹீரோ மோட்டோகாா்ப் லாபம் 95.38 சதவீதம் சரிவு

DIN

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப் நிகர லாபம் முதல் காலாண்டில் 95.38 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருமானம் ரூ.3,119.22 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.8,410.41 கோடியுடன் ஒப்பிடுகையில் கணிசமான வீழ்ச்சியாகும். வருவாய் குறைந்ததையடுத்து, நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,256.69 கோடியிலிருந்து 95.38 சதவீதம் சரிவடைந்து ரூ.57.78 கோடியானது. கடந்த 2019-20 ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் நிறுவனம் 18.43 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்த நிலையில், கரோனா பாதிப்பால் நிறுவனத்தின் விற்பனை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.65 லட்சமாக வீழ்ச்சி கண்டது. இதன் காரணமாகவே நிறுவனம் ஈட்டிய லாபம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என ஹீரோ மோட்டோகாா்ப் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT