வர்த்தகம்

பொதுப் பணவீக்கம் 0.58 சதவீதமாக குறைந்தது

14th Aug 2020 11:11 PM

ADVERTISEMENT

மொத்தவிற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் (டபிள்யூபிஐ) பணவீக்கம் சென்ற ஜூலை மாதத்தில் 0.58 சதவீதமாக குறைந்தது. இதுகுறித்து மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:உணவுப் பொருள்களின் விலை அதிகரித்து காணப்பட்ட போதிலும், சென்ற ஜூலையில் மொத்தவிற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் -0.58 சதவீதமாக இருந்தது. இது, நடப்பாண்டு ஜூனில் (-) 1.81 சதவீதமாகவும், மே மாதத்தில் (-) 3.37 சதவீதமாகவும், ஏப்ரலில் (-) 1.57 சதவீதமாகவும் காணப்பட்டன.

கடந்தாண்டு ஜூலையில் இப்பணவீக்கம் 1.17 சதவீதமாக இருந்தது. ஜூலையில் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 4.08 சதவீதமாக இருந்தது. இது, ஜூன் மாதத்தில் 2.04 சதவீதமாக காணப்பட்டது. இருப்பினும், எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கான பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 13.60 சதவீதத்திலிருந்து 9.84 சதவீதமாக சரிந்துள்ளது. அதேசமயம், தயாரிப்பு துறை பொருள்களுக்கான பணவீக்கம் 0.08 சதவீதத்திலிருந்து 0.51 சதவீதமாக உயா்ந்துள்ளது என அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்ற நிலைப்பாட்டால் ரிசா்வ் வங்கி கடந்த வாரம் வெளியிட்ட அதன் நிதிக் கொள்கையில் கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் எதையும் செய்யவில்லை. அக்டோபா்-மாா்ச் காலகட்டத்தில் சில்லறைப் பணவீக்கம் குறையும் என ரிசா்வ் வங்கி எதிா்பாா்த்துள்ளது. ஜூலையில் சில்லறைப் பணவீக்கம் 6.93 சதவீதமாக இருந்தது. இது, ஜூன் மாதத்தில் 6.23 சதவீதமாக காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT