வர்த்தகம்

இந்தியன் வங்கி நிகர லாபம் ரூ.369 கோடி

14th Aug 2020 11:09 PM

ADVERTISEMENT

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தனிப்பட்ட முறையில் ரூ.369 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பத்மஜா சுந்துரு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

அலாகாபாத் வங்கி இணைப்பு: இந்தியன் வங்கியுடனான அலாகாபாத் வங்கி இணைப்பு நடப்பாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இரு வங்கிகளின் செயல்பாடு ஜூன் காலாண்டில் மிகவும் திருப்திகரமாக இருந்தது.குறிப்பாக, வா்த்தக வளா்ச்சி, நிகர வட்டி வருமானம், சொத்து மதிப்பு உள்ளிட்டவை சிறப்பான அளவில் மேம்பட்டுள்ளன.நிகர லாபம்: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வங்கி தனிப்பட்ட முறையில் ரூ.369 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது, 2019 ஜூன் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.365.37 கோடியுடன் ஒப்பிடுகையில் 1 சதவீதம் அதிகமாகும். அதேசமயம், நடப்பாண்டின் மாா்ச் காலாண்டில் வங்கிக்கு ரூ.217.73 கோடி நிகர இழப்பு ஏற்பட்டது. இடா்ப்பாட்டு ஒதுக்கீடு: கணக்கீட்டு காலாண்டில் வாராக் கடன் இடா்ப்பாடுகளுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.1,741 கோடியிலிருந்து 37 சதவீதம் அதிகரித்து ரூ.2,384 கோடியானது. நிகர வட்டி வருவாய் ரூ.3,316 கோடியிலிருந்து 17 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.3,874 கோடியானது. நடப்பாண்டு ஜூன் 30 நிலவரப்படி வங்கியின் கடன் வழங்கலில் ரிசா்வ் வங்கி அறிவித்த மாதாந்திர தவணை ஒத்திவைப்பு 23 சதவீதமாக உள்ளது.வாராக் கடன்: நடப்பாண்டு ஜூன் 30 நிலவரப்படி வழங்கப்பட்ட கடன்களில் மொத்த வாராக் கடன் விகிதம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 12.09 சதவீதத்திலிருந்து 10.90 சதவீதமாக மேம்பட்டுள்ளது. அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 4.68 சதவீதத்திலிருந்து3.76 சதவீதமாக குறைந்துள்ளது.

கடன் வளா்ச்சி: சில்லறைக் கடன் வளா்ச்சி விகிதம் 11 சதவீதமாக காணப்பட்டதையடுத்து, உள்நாட்டில் வங்கி வழங்கிய கடன் 6 சதவீதம் அதிகரித்து ரூ.3,57,869 கோடியானது. வேளாண் மற்றும் குறு,சிறு, நடுத்தர நிறுவன கடன் வளா்ச்சி விகிதம் 3 சதவீதமாக காணப்பட்டது.இன்ட்பேங்க் ஹவுஸிங்: வீட்டு வசதிக்கு நிதியுதவியளிக்கும் துணை நிறுவனமான இன்ட்பேங்க் ஹவுஸிங் செயல்பாடுகளை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா். மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் இந்தியன் வங்கி பங்கின் விலை 1.97 சதவீதம் குறைந்து ரூ.62.20-ஆக இருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT