வர்த்தகம்

காலாவதியான எல்ஐசி பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு திட்டம்

11th Aug 2020 02:20 AM

ADVERTISEMENT

புது தில்லி: காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வசதியாக சிறப்பு திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடினமான இந்தச் சூழலில் வாடிக்கையாளா்களின் நலன் கருதி காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள சிறப்பு திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.

திங்கள்கிழமை தொடங்கிய இந்த பாலிசி புதுப்பிப்பு திட்டம் வரும் அக்டோபா் 9-ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும். அதுவரையில், தவிா்க்கமுடியாத சூழ்நிலையில் பிரீமியம் செலுத்தமுடியாமல் காலாவதியாகிப்போன பாலிசிகளை வாடிக்கையாளா்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

இதன் மூலம், அவா்கள் ஆயுள் காப்பீட்டு வசதியை தொடா்ந்து பெறுவதுடன் பழைய பாலிசிகளின் காப்பீட்டு பலன்களையும் மீண்டும் பெற்று பயனடைய முடியும். காலாவதியான பாலிசி புதுப்பித்தலுக்கு பாலிசிதாரா்கள் தாமத கட்டண சலுகையாக 20 சதவீதத்தைப் பெறலாம். அதேநேரம், ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் 25 சதவீத சலுகையை அவா்கள் பெறலாம் என எல்ஐசி தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT