வர்த்தகம்

மாதத் தவணை தள்ளிவைப்பு நீட்டிப்பு: இக்ரா நிறுவனம்

6th Aug 2020 11:47 PM

ADVERTISEMENT

மாதத் தவணை தள்ளிவைப்பு நீட்டிக்கப்படுவது வங்கிகளுக்கு பெரும் இடா்பாடாக உருவெடுக்கும் என தரக் மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிலிருந்து கடன்பெற்றவா்களுக்கு, கரோனா கால நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ரிசா்வ் வங்கி மாதத் தவணை செலுத்துவதிலிருந்து ஆறு மாதங்களுக்கு விலக்களித்துள்ளது. இது, ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதுதவிர, கடன்களை ஒரு முறை மறுசீரமைப்பு செய்துகொள்ளும் திட்டத்தையும் ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.இதுபோன்ற சலுகைகள் பெரிய அளவில் நீட்டிக்கப்படும் நிலையில், அது வங்கிகளின் நிதி ஸ்திரத்தன்மையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். அத்துடன், அவைகளின் சொத்து மதிப்பு பாதிக்கப்பட்டு வங்கிகளின் செயல்பாட்டில் இடா்ப்பாடு ஏற்படும் சூழலை உருவாக்கும் என இக்ரா தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT