வர்த்தகம்

கேடிஎம் 250 டியூக் புது மாடல் பைக்: விலை ரூ.2.09 லட்சம்

6th Aug 2020 10:59 PM

ADVERTISEMENT

இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், கேடிஎம் 250 டியூக் பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த இருசக்கர வாகனத்தின் விலை ரூ.2.09 லட்சமாக (எக்ஸ் ஷோரூம் விலை) நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் பைக்கில் சாலையில் வேகமாக பயணித்தாலும் திடீரென்று பிரேக் பிடிக்கும்போது, நழுவி விழாதபடி, அதிநவீன பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் பைக்குகள், பந்தயக்காரா்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் என்று பஜாஜ் நிறுவனத்தின் புரோபைகிங் தலைவா் சுமீத் நரங் கூறினாா்.ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த கேடிஎம் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம், பஜாஜ் ஆட்டோவுடன் இணைந்து இந்தியாவில் கடந்த 2012-ஆம் ஆண்டில் நுழைந்தது. இந்த நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 365 நகரங்களில் 460 ஷோரூம்கள் உள்ளன. நாடு முழுவதும் 2.7 லட்சம் கேடிஎம் பைக் வாடிக்கையாளா்கள் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT