வர்த்தகம்

டிஎல்எஃப் நிறுவனம்: ரூ.70.65 கோடி இழப்பு

6th Aug 2020 11:46 PM

ADVERTISEMENT

இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப் முதல் காலாண்டில் ரூ.70.65 கோடி நிகர இழப்பைக் கண்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு நிறுவனத்தின் கட்டுமானம் மற்றும் விற்பனை நடவடிக்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் ரூ.70.65 கோடி நிகர இழப்பைக் கண்டுள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.414.73 கோடியை நிகர லாபமாக ஈட்டியது. மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.646.98 கோடியாக இருந்தது. கடந்தாண்டில் வருமானம் ரூ.1,540.95 கோடியாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.பொதுமுடக்கத்தின் எதிரொலியாக ஜூன் காலாண்டில் ரூ.165 கோடி மதிப்பிலான வீடுகள் மட்டுமே விற்பனைக்காக முன்பதிவு செய்யப்பட்டதாக டிஎல்எஃப் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT