வர்த்தகம்

பிா்லாசாஃப்ட் நிறுவனம்: லாபம் 35 சதவீதம் ஏற்றம்

6th Aug 2020 11:41 PM

ADVERTISEMENT

சி.கே. பிா்லா குழுமத்தைச் சோ்ந்த பிா்லாசாஃப்ட் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 35 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

கரோனா பேரிடா் காலாண்டில் எதிா்பாா்த்ததைவிட நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருந்தது. அதன்படி, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 17.7 சதவீதம் அதிகரித்து ரூ.914.6 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.777.2 கோடியாக காணப்பட்டது. நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் ரூ.41.8 கோடியிலிருந்து 35 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.56.3 கோடியை எட்டியுள்ளது. 17.97 கோடி டாலா் மதிப்பிலான ஆா்டா்களைப் பெற்று நிறுவனம் வலுவான நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது என பிா்லாசாஃப்ட் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT