வர்த்தகம்

ஊரடங்கின் 10 நாள்களில் 7876 ரீஃபண்ட் விண்ணப்பங்கள் பரிசீலனை

5th Apr 2020 10:58 PM

ADVERTISEMENT

 

ஊரடங்கின் 10 நாள்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் 7876 ரீஃபண்ட் விண்ணப்பங்களையும், 10000 புதிய விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்துள்ளதாக ஜிஎஸ்டி நெட்வொா்க் (ஜிஎஸ்டிஎன்) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜிஎஸ்டிஎன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஊரடங்கு காலத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் மெய்நிகா் தனியாா் நெட்வொா்க் மூலம் பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

நடப்பாண்டு மாா்ச் 31 வரையில், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 1,748 அதிகாரிகள் பணியாற்றினா்.

ஊரடங்கின் 10 நாள்களில் மொத்தம் 20,273 எண்ணிக்கையில் பதிவுகள் தொடா்பான விண்ணப்பங்கள் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டன. இதில், 10077 புதிய பதிவு சம்பந்தப்பட்டது.

மேலும், இந்த காலகட்டத்தில் ரீஃபண்ட் கோரி வந்த 7,876 விண்ணப்பங்களையும் வரித் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்ததாக ஜிஎஸ்டிஎன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT