வர்த்தகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 42,896 கோடி டாலர்

22nd Sep 2019 01:19 AM

ADVERTISEMENT

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த  வாரத்தில் 42,896 கோடி டாலராக குறைந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் புள்ளிவிவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 64 கோடி டாலர் (ரூ.4,480 கோடி) குறைந்து 42,896 கோடி டாலராக (ரூ.30.02 லட்சம் கோடி) இருந்தது.இது இதற்கு முந்தைய வாரத்தில், 100 கோடி டாலர் உயர்ந்து 42,960 கோடி டாலராக காணப்பட்டது.
கணக்கீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு மதிப்பு 24 கோடி டாலர் குறைந்து 2,710 கோடி டாலராக இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT