நிர்மலா சீதாராமன் அறிவிப்பின் எதிரொலி: பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தை 'விர்' 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின் எதிரொலியாக, கடந்த  பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தை | கோப்புப் படம்
மும்பை பங்குச் சந்தை | கோப்புப் படம்

மும்பை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின் எதிரொலியாக, கடந்த  பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி மற்றும் உள்நாட்டில் முதலீட்டை ஊக்குவிக்கும் விதமாக உள்நாட்டு நிறுவனங்களுக்கும் புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட்  வரி விகிதங்களைக் குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கோவாவில் நடைபெற்ற 'பிக்கி' கூட்டத்திற்கு முன்பாக அறிவித்தார்.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின் எதிரொலியாக, கடந்த  பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

குறிப்பாக வீழ்ந்து கிடந்த ஆட்டோமொபைல் துறை பங்குகள் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,000 புள்ளிகள் உயர்ந்து உள்ளது. இதன்காரணமாக முதலீட்டாளர்களின் சொத்துமதிப்பு ரூ. 7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com