பிஎன்பி, யூபிஐ, ஓபிசி இணைப்பால் உருவாகும் புதிய வங்கி வரும் ஏப்ரலில் செயல்படும்

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (யூபிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் உருவாகும் புதிய நிறுவனத்தின் செயல்பாடு அடுத்தாண்டு ஏப்ரல் முதல்
பிஎன்பி, யூபிஐ, ஓபிசி இணைப்பால் உருவாகும் புதிய வங்கி வரும் ஏப்ரலில் செயல்படும்

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (யூபிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் உருவாகும் புதிய நிறுவனத்தின் செயல்பாடு அடுத்தாண்டு ஏப்ரல் முதல் செயல்பாட்டுக்கு வரும் என யூபிஐ-யின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான அசோக் குமார் பிரதான் சனிக்கிழமை தெரிவித்தார்.
கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற மூன்று வங்கிகளின் வாடிக்கையாளர் கூட்டத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொது மேலாளர் சந்தர் குரானா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் பொதுமேலாளர் பினய் குமார் குப்தா, யூபிஐ-யின் நிர்வாக இயக்குநர் அசோக் குமார் பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பையடுத்து,  அசோக் குமார் பிரதான் கூறியதாவது:
பிஎன்பி, யூபிஐ, ஓபிசி இணைப்பு நடைமுறைகள் முழுமையடைய இன்னும் சில காலம் பிடிக்கும். இருப்பினும், மூன்று வங்கிகள் இணைந்து உருவாகும் புதிய நிறுவனத்தின் செயல்பாடு 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த இடைப்பட்ட காலத்தில், மூன்று வங்கிகளும் தனித்தனியாகவே இயங்கும். 
ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் நிறுவனத்துக்கு புதிய பெயர் சூட்ட வாய்ப்புள்ளது. இந்த மூன்று வங்கிகளின் இணைப்புக்குப் பிறகு, ரூ.18 லட்சம் கோடி வர்த்தகத்துடன் நாட்டின் மிகப்பெரிய இரண்டாவது வங்கியாக அந்த நிறுவனம் உருவெடுக்கும். முதலிடத்தை பாரத ஸ்டேட் வங்கி வகிக்கும். 
வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாகும் புதிய நிறுவனத்தில் பணியாளர் குறைப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாது. விருப்ப ஓய்வு வழங்கப்படும் வாய்ப்புகளும் இல்லை.
ஒருங்கிணைப்புக்குப் பிறகு பணியாளர்களின் எண்ணிக்கை 1 லட்சமாகவும், கிளைகளின் எண்ணிக்கை 11,400-ஆகவும் இருக்கும் என்றார் அவர்.
பிஎன்பிக்கு ரூ.16,000 கோடியும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ.1,600 கோடியும் மூலதனம் அளிப்பதாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது 
குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com