தங்கம் விலை பவுன் ரூ.28,672

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 குறைந்து, ரூ.28,672-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
தங்கம் விலை பவுன் ரூ.28,672

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 குறைந்து, ரூ.28,672-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு கார

ணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து, உச்சத்தை தொட்ட  நிலையில், கடந்த சில நாள்களாக தங்கம் விலை கணிசமாகக் குறைந்து வருகிறது. 

இந்தநிலை சனிக்கிழமையும் தொடர்ந்தது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கம் பவுனுக்கு ரூ.224  குறைந்து, ரூ.28,672-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 குறைந்து, ரூ.3,584-க்கு விற்பனையானது. செப்டம்பர்  10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை பவுனுக்கு ரூ.696 வரை குறைந்துள்ளது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.20  குறைந்து ரூ.48.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,200 குறைந்து, ரூ.48,700 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்    3,584
1 பவுன்  தங்கம்    28,672
1 கிராம் வெள்ளி    48.70
1 கிலோ வெள்ளி    48,700 

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்    3,612
1 பவுன் தங்கம்    28,896
1 கிராம் வெள்ளி    50.90
1 கிலோ வெள்ளி    50,900
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com