வர்த்தகம்

கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்தது பாரத ஸ்டேட் வங்கி

10th Sep 2019 12:55 AM

ADVERTISEMENT


நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.10 சதவீதம் வரை குறைத்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வங்கியின் அனைத்து விதமான சில்லறைக் கடன்களுக்கும் அடிப்படையான எம்சிஎல்ஆர் வட்டி விகிதம், ஆண்டுக்கு 8.25 சதவீதமாக இருந்தது. இது தற்போது 8.15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
செப். 10 முதல் இந்த வட்டிக் குறைப்பு அமலுக்கு வருகிறது.
நடப்பு நிதியாண்டில் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவது இது 3-ஆவது முறையாகும்.
இதுமட்டுமன்றி, குறித்தகால சில்லறை டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களில் 0.20 முதல் 0.25 சதவீதம் வரையிலும், குறித்தகால மொத்த டெபாசிட்டுகளுக்கு 0.10 முதல் 0.20 சதவீதம் வரையிலும் வட்டி குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டிகைக்காலத்தில் அதிக வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் எஸ்பிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT