வர்த்தகம்

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 15% சரிவு

4th Sep 2019 12:56 AM

ADVERTISEMENT


டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத வாகன விற்பனை 15.37 சதவீதம் சரிந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: டிவிஎஸ் மோட்டார் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 2,90,455 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனை செய்யப்பட்ட 3,43,217 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 15.37 சதவீதம் குறைவாகும்.
மொத்த இருசக்கர வாகன விற்பனை 16.42 சதவீதம் சரிவடைந்து 2,75,851-ஆக இருந்தது. அதிலும் குறிப்பாக,  உள்நாட்டுச் சந்தையில் இருசக்கர வாகன விற்பனை 2,75,688 என்ற எண்ணிக்கையிலிருந்து 20.37 சதவீதம் சரிந்து 2,19,528-ஆனது. மோட்டார் சைக்கிள் விற்பனை 16.96 சதவீதம் குறைந்து 1,09,393-ஆகவும், ஸ்கூட்டர் விற்பனை 13.73 சதவீதம் சரிந்து 1,09,272-ஆகவும் காணப்பட்டன. அதேசமயம், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 5.56 சதவீதம் உயர்ந்து 69,702-ஆக இருந்தது என அந்த அறிக்கையில் டிவிஎஸ் தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT