வர்த்தகம்

மாருதி கார் விற்பனை 24% சரிவு

2nd Oct 2019 04:30 AM

ADVERTISEMENT


 நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் செப்டம்பர்  மாத விற்பனை 24 சதவீதம் சரிவடைந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மாருதி சுஸுகி சென்ற செப்டம்பரில் 1,22,640 கார்களை விற்பனை செய்தது. இது, கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 1,62,290 கார்களுடன் ஒப்பிடுகையில் 24.4 சதவீதம் சரிவாகும். உள்நாட்டுச் சந்தைகளில்  விற்பனை 26.7 சதவீதம் சரிந்து 1,12,500-ஆக இருந்தது. 
ஆல்டோ, வேகன்ஆர் உள்ளிட்ட சிறிய ரக கார்களின் விற்பனை 34,971 என்ற எண்ணிக்கையிலிருந்து குறைந்து 20,085-ஆனது. நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி 17.8 சதவீதம் வீழ்ச்சியடைந்து 8,740-லிருந்து 7,188-ஆக குறைந்துள்ளது என அந்த செய்திக்குறிப்பில் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT