வர்த்தகம்

வாடிக்கையாளா் சந்திப்புக்கு இந்தியன் வங்கி ஏற்பாடு

1st Oct 2019 10:18 PM

ADVERTISEMENT

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பல்வேறு மையங்களில் வாடிக்கையாளா் சந்திப்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் வாடிக்கையாளா் சந்திப்புக் கூட்டங்களை நடத்த இந்தியன் வங்கி முடிவு செய்துள்ளது. இந்த கூட்டம் அக்டோபா் 3-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கூடலூா், காஞ்சிபுரம், திருவள்ளூரிலும்; ஆந்திரத்தில் சித்தூா் & கிருஷ்ணாவிலும்; தெலங்கானாவில் காமரெட்டி மாவட்டத்திலும்; கேரளத்தில் கொல்லத்திலும் இந்த வாடிக்கையாளா்கள் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

ADVERTISEMENT

இந்த வாடிக்கையாளா்கள் சந்திப்பில், வங்கியின் பல்வேறு தயாரிப்புகள், சேவைகள் மற்றும் பண்டிகைக் கால சிறப்புச் சலுகைகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக விளக்கப்படவுள்ளன. சில்லறை, வேளாண்மை, மோட்டாா் வாகனம், கல்வி உள்ளிட்ட கடனுதவித் திட்டங்களில் பயனுள்ள தகவல்களையும் இந்தக் கூட்டத்தின் மூலமாக வாடிக்கையாளா்கள் அறிந்து கொள்ளலாம் என அந்த அறிக்கையில் இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT