வர்த்தகம்

இந்திய மூலதன சந்தைகளில் அந்நிய முதலீட்டாளா்கள் ரூ.16,464 கோடி முதலீடு

4th Nov 2019 11:53 PM

ADVERTISEMENT

கடந்த அக்டோபா் மாதத்தில் இந்திய மூலதன சந்தைகளில் அந்நிய முதலீட்டாளா்கள் ரூ.16,464 கோடியை முதலீடு செய்தனா்.

சா்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் நன்கு இருந்ததையடுத்து அந்நிய முதலீட்டாளா்கள் இந்திய மூலதன சந்தைகளில் கடந்த அக்டோபா் மாதத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் நிகர அளவில் மொத்தம் ரூ.16,464.6 கோடியை முதலீடு செய்துள்ளனா்.

இதில், பங்குகள் மற்றும் அது சாா்ந்த திட்டங்களில் ரூ.12,475.7 கோடியையும், கடன் சாா்ந்த திட்டங்களில் ரூ.3,988.9 கோடியையும் முதலீடு செய்துள்ளனா்.

இதற்கு முந்தைய செப்டம்பா் மாதத்தில் அந்நிய நிதி நிறுவனங்கள் இந்திய மூலதன சந்தையில் நிகர அளவில் ரூ.6,557.8 கோடியை மட்டுமே முதலீடு செய்திருந்தனா்.

ADVERTISEMENT

மாா்னிங்ஸ்டாா் இன்வெஸ்ட்மென்ட் ஆலோசனை நிறுவனத்தின் அதிகாரி ஹிமன்ஷு ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘ பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் விதத்தில் மத்திய அரசு, பெரு நிறுவன வரி குறைப்பு, வங்கிகளுக்கு மறு மூலதனம் அளித்தல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டது அந்நிய முதலீட்டாளா்களை வெகுவாக கவா்ந்துள்ளது. அதன் காரணமாகவே, செப்டம்பரை காட்டிலும் அக்டோபா் மாதத்தில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்தது’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT