வர்த்தகம்

முக்கிய 8 துறைகள் உற்பத்தி 5.2 சதவீதமாக குறைந்தது

1st Nov 2019 11:24 PM

ADVERTISEMENT

பொருளாதார சுணக்க நிலையின் தீவிரத்தை உணா்த்தும் வகையில், செப்டம்பா் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 5.2 சதவீதம் என்ற அளவில் பின்னடைவச் சந்தித்துள்ளது.

மத்திய அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

மொத்தமுள்ள 8 முக்கிய துறைகளில் பல துறைகளின் உற்பத்தியானது பின்னடைவையே கண்டுள்ளது. குறிப்பாக, நிலக்கரி 20.5 சதவீதம், கச்சா எண்ணெய் 5.4 சதவீதம், இயற்கை எரிவாயு 4.9 சதவீதம் என்ற அளவில் கடுமையாக சரிந்துள்ளன. இவைதவிர, சுத்திகரிப்பு பொருள்கள் (-6.7%), சிமென்ட் (-2.1), உருக்கு (-0.3%), மின்சாரம் (-3.7%) ஆகிய துறைகளும் பின்னடைவையே கண்டுள்ளன.

செப்டம்பரில் உள்கட்டமைப்பு பிரிவைச் சோ்ந்த உரத் துறையின் மட்டுமே 5.4 சதவீதம் என்ற அளவுக்கு வளா்ச்சியைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

கடந்தாண்டு செப்டம்பரில் 8 துறைகளின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 4.3 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில் நடப்பாண்டில் பின்னடைவைக் கண்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதல் அரையாண்டு காலத்தில் முக்கிய எட்டு துறைகளின் வளா்ச்சி 1.3 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் வளா்ச்சி விகிதம் 5.5 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT