செல்லிடப்பேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்தது

மும்பை, மே 25:
செல்லிடப்பேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்தது

செல்லிடப்பேசி வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாயை அதிகரிக்கும் வகையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கையில் கடந்த மார்ச் மாதத்தில் 2.2 கோடி குறைந்துள்ளது.
இதையடுத்து பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் செல்லிடப்பேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 21.9 சதவீதம் குறைந்து 116.2 கோடியாகி உள்ளது.
செயல்பாட்டில் உள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகளவு கவர்ந்ததில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பிஎஸ்என்எல்/எம்டிஎன்எல் நிறுவனங்கள் 5 லட்சம் வாடிக்கையாளரை ஈர்த்துள்ளது.
செயல்பாட்டில் உள்ள வாடிக்கையாளர் பிரிவில், பிப்ரவரியில் 24.4 சதவீதமாக இருந்த ஜியோவின் பங்களிப்பு மார்ச் மாதத்தில் 25.2 சதவீதமாக வலுவடைந்துள்ளது. வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 36.9 சதவீதத்திலிருந்து 36 சதவீதமாக குறைந்துள்ள போதிலும் அந்நிறுவனம் இப்பிரிவில் முதலிடத்தில் உள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு  32.1 சதவீதமாக உள்ளது.
வயல்லெஸ் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு மார்ச் மாதத்தில் 54.49 கோடியைத் தொட்டுள்ளது. ஒட்டுமொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில் இது 47 சதவீதமாகும். மார்ச் மாதத்தில் மட்டும் 1.29 கோடி பேர் புதிதாக பிராட்பேண்ட் சேவையில் இணைந்துள்ளனர்.
வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் சராசரி வருவாயை பெருக்குவதற்காகவும், குறைவான வருவாய் தரும் வாடிக்கையாளர்களை விலக்கி வைப்பதற்காகவும் பல நிறுவனங்கள் மாதாந்திர குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தின. அதன் காரணமாகவே வாடிக்கையாளர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக இக்ரா தரக்குறியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com