புதன்கிழமை 26 ஜூன் 2019

பரஸ்பர நிதி  வர்த்தகத்திலிருந்து வெளியேறுகிறது ரிலையன்ஸ் கேப்பிட்டல்

DIN | Published: 24th May 2019 01:08 AM

பரஸ்பர நிதி துறை வர்த்தகத்திலிருந்து வெளியேறுவதாக ரிலையன்ஸ் கேப்பிட்டல் (ஆர்கேப்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆர்கேப் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது: 
ரிலையன்ஸ் கேப்பிட்டல் 
நிறுவனம், ஜப்பானின் நிப்பான் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அஸட் மேனேஜ்மெண்ட் (ஆர்என்ஏஎம்) என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கி பரஸ்பர நிதி துறையில் ஈடுபட்டு வந்தது. 
இக்கூட்டு நிறுவனத்தில் இரு நிறுவனங்களுக்கும் தலா 42.88 சதவீத பங்குகள் உள்ளன. இதர சதவீதம் பொது பங்குதாரர்களை சார்ந்தவை. தற்போது, பரஸ்பர நிதி வர்த்தகத்திலிருந்து ரிலையன்ஸ் வெளியேற முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக, கூட்டு நிறுவனத்தில் உள்ள 42.88 சதவீத பங்கை நிப்பான் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ரிலையன்ஸ் கேப்பிட்டல் விற்பனை செய்யவுள்ளது. இதற்கான, இறுதி ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கிடையே கையெழுத்தாகியுள்ளது.
இந்த பங்கு விற்பனை மூலமாக ரிலையன்ஸ் கேப்பிட்டலுக்கு ரூ.6,000 கோடி கிடைக்கும் என ஆர்கேப் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சரிவைக் கண்ட காபி ஏற்றுமதி
பங்குச் சந்தைகளில் ஏறுமுகம்: சென்செக்ஸ் 312 புள்ளிகள் அதிகரிப்பு
ஃபியட் கிறிஸ்லரின் புதிய மேம்படுத்தப்பட்ட ஜீப் ரகம் அறிமுகம்
தொலைத் தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 118.38 கோடியாக உயர்வு
வங்கிகள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டுமா..? ரிசர்வ் வங்கி இணையதளத்தில் புதிய வசதி