சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

ஜிஐசி-ஆர்இ நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.603 கோடி

DIN | Published: 24th May 2019 01:03 AM

மத்திய அரசுக்கு சொந்தமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா-ரீஇன்சூரன்ஸ் (ஜிஐசி-ஆர்இ) தனிப்பட்ட  நான்காம் காலாண்டு லாபம் ரூ.603.37 கோடியாக குறைந்துள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனம் வியாழக்கிழமை மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2017-18 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது  காலாண்டில் நிறுவனம் ரூ.751.60 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2018-19 நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிறுவனத்தின் லாபம் 19.7 சதவீதம் குறைந்து ரூ.603.37 கோடியாகியுள்ளது. மார்ச் காலாண்டில் மொத்த பிரீமியம் வசூல் ரூ.8,525.06 கோடியிலிருந்து குறைந்து ரூ.8,089.35 கோடியானது.
சட்ட விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, வரிகளுக்கான ஒதுக்கீடு அதிகரித்து, கடந்த 2018-19 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,233.58 கோடியிலிருந்து 31.2 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.2,224.30 கோடியானது. மொத்த பிரீமியம் வசூல் ரூ.41,799.37 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.44,238 கோடியாக காணப்பட்டது. 
கடந்த நிதியாண்டில் முதலீட்டு வருவாய் ரூ.5,392.03 கோடியிலிருந்து 18.7 சதவீதம் உயர்ந்து ரூ.6,401.34 கோடியாக இருந்தது. 
கடந்த 2018-19 நிதியாண்டுக்கு, பங்கு ஒன்றுக்கு ரூ.6.75 ஈவுத் தொகை வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கான உறுப்பினர்களின் ஒப்புதல் நிறுவனத்தின் 47-ஆவது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் பெறப்படும் என அந்த அறிக்கையில் ஜிஐசி-ஆர்இ தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பெரு நிறுவன வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 1921 புள்ளிகள் அதிகரிப்பு
பி.எச்.இ.எல் நிறுவனம் 100 சதவீத ஈவுத்தொகை அறிவிப்பு
உணவுதானிய உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரிக்கும்: மத்திய வேளாண் அமைச்சகம்
கடன்பத்திரம் மூலம் ரூ.3,000 கோடி மூலதனம்: எச்.டி.எஃப்.சி நிறுவனம் திட்டம்
நிர்மலா சீதாராமன் அறிவிப்பின் எதிரொலி: பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தை 'விர்'