நரேந்திர மோடிக்கு ரஷியா, சீனா அதிபர்கள் உள்ளிட்ட சர்வதேசத் தலைவர்கள் வாழ்த்து

நரேந்திர மோடிக்கு ரஷியா, சீனா, இலங்கை, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நரேந்திர மோடிக்கு ரஷியா, சீனா அதிபர்கள் உள்ளிட்ட சர்வதேசத் தலைவர்கள் வாழ்த்து

தொடர்ந்து 2-ஆவது முறையாக இந்திய பிரதமராக தேர்வுசெய்யப்படவுள்ள நரேந்திர மோடிக்கு சீனா, இலங்கை, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2019 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

மொத்தமுள்ள 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி 340-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த முறையை விட தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் தற்போது முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் பெரும்பான்மையோடு ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், ரஷியா அதிபர் விளாதிமீர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்சூ அபே உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் நரேந்திர மோடிக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாஹு மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்தியா உடனான நட்புறவு தொடர வேண்டும், இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com