அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க ஹூவாவெய் தயார் நிலையில் உள்ளது: ரென் செங்ஃபெ

ஹுவாவெய் நிறுவனத்துக்கு அமெரிக்கா அளித்துள்ள 90 நாள் தற்காலிக உரிமம் என்பது சிறு பயனையே கொண்டுள்ளது.
அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க ஹூவாவெய் தயார் நிலையில் உள்ளது: ரென் செங்ஃபெ

ஹுவாவெய் நிறுவனத்துக்கு அமெரிக்கா அளித்துள்ள 90 நாள் தற்காலிக உரிமம் என்பது சிறு பயனையே கொண்டுள்ளது.

இருப்பினும், ஹுவாவெய் தயார் நிலையில் உள்ளது என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரென் செங்ஃபெய் சீன ஊடகங்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அமெரிக்காவிடமிருந்து உட்பொருள் கட்டுப்பாட்டை ஓராண்டுக்கு முன்பு நாங்கள் பெற்றோம். ஹுவாவெய் 5ஜி தொழில்நுட்பத்தின் செயல்திறன் மீது நம்பிக்கை உண்டு.

கட்டுப்பாடுகள் எதுவும் ஹுவாவெய்யின் 5ஜியைக் கட்டுப்படுத்திவிட முடியாது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு வேறெந்த நிறுவனங்களாலும் ஹுவாவெய்யின் 5ஜி தொழில்நுட்பத்தை அடைய முடியாது என்று ஊகிக்கிறேன் என்றார்.

தவிரவும், அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் சில்லுகளைப் போலவே எங்களாலும் தயாரிக்க முடியும். இவ்வாறுசெயின், அமெரிக்காவிடமிருந்து இனிமேல் சில்லுகள் வாங்கப்போவதில்லை என்று பொருள் அல்ல.

அமெரிக்கத் தொழில்நுட்பத்தின் அகலத்தையும் ஆழத்தையும் நாம் கற்க வேண்டும். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பெரிய இடைவெளி நிலவிய போதிலும், 5ஜி தொழில்நுட்பத் துறையில் ஹுவாவெய்யே முன்னணி வகிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com