வியாழக்கிழமை 27 ஜூன் 2019

சுந்தரம் ஹோண்டா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டி சாதனை

DIN | Published: 17th May 2019 12:51 AM


சுந்தரம் ஹோண்டாவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1 லட்சம் என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சரத் விஜயராகவன்  கூறியதாவது: ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் முன்னணி முகவராக சுந்தரம் ஹோண்டா செயல்பட்டு வருகிறது. முதலாவது கார் 1998-ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 14 ஆண்டுகள் 4 மாதங்களுக்குப் பிறகு 40,000 - ஆவது கார் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு, 6 ஆண்டுகள் 11 மாதங்கள் கழித்து ஹோண்டா கார் விற்பனை 1 லட்சம் என்ற மைல்கல்லை தற்போது எட்டி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை தமிழகம், ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மூலம் சாத்தியமாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக நாடு தழுவிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதன் மூலம் 2018-19 நிதியாண்டில் 13 தேசிய விருதுகளை நிறுவனம் பெற்றுள்ளது.
சுந்தரம் ஹோண்டாவின் விற்றுமுதல் ரூ.840 கோடியாகவும், பணியாளர்களின் எண்ணிக்கை 1,400-ஆகவும் உள்ளது. மேலும், 50 ஆயிரம் சதுர அடி பரப்பிலான பணிமனை மற்றும் 12 ஷோரூம்களை கொண்டு சுந்தரம் ஹோண்டா இயங்கி வருகிறது. 2019-20 மற்றும் 2020-21-ஆம் நிதியாண்டுகளில் முறையே 2 மற்றும் 3 ஷோரூம்களை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக,  3 மற்றும் 4-ஆம் நிலை நகரங்களில் இந்த விரிவாக்கம் இருக்கும் என்றார்அவர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சரிவைக் கண்ட காபி ஏற்றுமதி
பங்குச் சந்தைகளில் ஏறுமுகம்: சென்செக்ஸ் 312 புள்ளிகள் அதிகரிப்பு
ஃபியட் கிறிஸ்லரின் புதிய மேம்படுத்தப்பட்ட ஜீப் ரகம் அறிமுகம்
தொலைத் தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 118.38 கோடியாக உயர்வு
வங்கிகள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டுமா..? ரிசர்வ் வங்கி இணையதளத்தில் புதிய வசதி