திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

பயணிகள் வாகன விற்பனை  8 ஆண்டுகள் காணாத சரிவு

DIN | Published: 14th May 2019 01:01 AM


பயணிகள் வாகன விற்பனை சென்ற ஏப்ரல் மாதத்தில் 8 ஆண்டுகள் காணாத சரிவைக் கண்டுள்ளதாக இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கம் திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
இருசக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து  பிரிவைச் சேர்ந்த வாகன விற்பனையும் சென்ற ஏப்ரல் மாதத்தில் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு வாகன விற்பனை இந்த அளவுக்கு குறைந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனை ஏப்ரல் மாதத்தில் 2,47,541-ஆக இருந்தது. கடந்தாண்டு ஏப்ரல் மாத விற்பனையான 2,98,504 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவானதாகும்.
குறிப்பாக, நடப்பாண்டு ஏப்ரலில் கார் விற்பனை 2,00,183 என்ற எண்ணிக்கையிலிருந்து 19.93 சதவீதம் சரிவடைந்து 1,60,279-ஆனது. மோட்டார்சைக்கிள் விற்பனை 11.81 சதவீதம் குறைந்து 10,84,811-ஆக காணப்பட்டது.
மொத்த இருசக்கர வாகன விற்பனை 19,58,761-லிருந்து 16.36 சதவீதம் வீழ்ச்சியடைந்து 16,38,388-ஆக இருந்தது. அதேபோன்று வர்த்தக வாகன விற்பனையும் 15.93 சதவீதம் குறைந்து 20,01,096-ஆக காணப்பட்டது என புள்ளிவிவரத்தில் எஸ்ஐஏஎம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எஸ்ஐஏஎம் துணை தலைமை இயக்குநர் சுகாதோ சென் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் ஏப்ரலில்தான் வாகன விற்பனையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் பெரும் சரிவினைக் கண்டுள்ளது. புதிய நிதியாண்டின் தொடக்கமும் மோட்டார் வாகன துறைக்கு மிகச் சிறப்பானதாக அமையவில்லை. நிதி நெருக்கடி, காப்பீட்டு கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது ஆகியவை வாகன விற்பனையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றார் அவர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஜவுளி ஏற்றுமதியில் மந்த நிலை
நலிவடைந்து வரும் முந்திரி வர்த்தகம்
கசக்கும் கரும்பு விவசாய தொழில்
தங்கம் விலை பவுன் ரூ.28,672
அந்நியச் செலாவணி கையிருப்பில் 100 கோடி டாலர் அதிகரிப்பு