மே 15-இல் அறிமுகமாகின்றன கூகுள் பிக்ஸல் 3ஏ, 3ஏ-எக்ஸ்எல்

ஸ்மார்ட் போன் சந்தையில் கூகுள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகங்களான பிக்ஸல் 3ஏ மற்றும் பிக்ஸல் 3ஏ-எக்ஸ்எல் ரகங்கள் வரும் புதன்கிழமையிலிருந்து இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கின்றன.
மே 15-இல் அறிமுகமாகின்றன கூகுள் பிக்ஸல் 3ஏ, 3ஏ-எக்ஸ்எல்


ஸ்மார்ட் போன் சந்தையில் கூகுள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகங்களான பிக்ஸல் 3ஏ மற்றும் பிக்ஸல் 3ஏ-எக்ஸ்எல் ரகங்கள் வரும் புதன்கிழமையிலிருந்து இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கின்றன.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கூகுளின் பிக்ஸல் 3ஏ மற்றும் பிக்ஸல் 3ஏ-எக்ஸ்எல் ஆகிய நவீன ஸ்மார்ட் போன்கள் இந்தியச் சந்தையில் வரும் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.
கூகுளின் முந்தைய பிக்ஸல் வரிசை செல்லிடப் பேசிகளைவிட குறைவாக, இந்த புதிய ரகங்களுக்கு ரூ.39,999 முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் உயர் ரக ஸ்மார்ட் போன்களுக்கான சந்தையில், ஆப்பிள், சாம்ஸங், ஒன்பிளஸ் ஆகிய நிறுவனத் தயாரிப்புகளோடு இந்த புதிய பிக்ஸல் செல்லிடப் பேசிகள் போட்டியிடும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இந்த இரு பிக்ஸல் ரக செல்லிடப் பேசிகளும், மிகச் சிறந்த கேமரா அம்சங்களையும், நீடித்து நிற்கும் பேட்டரியையும் கொண்டிருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிகச் சிறிதாக இருந்தாலும், அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்தியாவின் உயர் ரக ஸ்மார்ட் போன் சந்தையில், சற்று விலை குறைவான ரகங்களை கூகுள் அறிமுகம் செய்வதால், முதல் முறையாக அந்த ரக செல்லிடப் பேசிகளை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com