ஈஐடி பாரியின் லாபம் ரூ.201 கோடி

இந்தியாவின் மிகப் பெரிய சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஈஐடி பாரி (இந்தியா) லிமிடட், கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.201.72 கோடியை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில், நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.201.72 கோடியாக உள்ளது.
மார்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் முழு நிதியாண்டில், நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.437.65 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் வரிக்குப் பிந்தைய லாபமான ரூ.517.43 கோடியைவிட சற்று குறைவாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com