மாரிக்கோ லாபம் இருமடங்கு அதிகரிப்பு

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த உள்நாட்டு நிறுவனமான மாரிக்கோவின் நான்காம் காலாண்டு லாபம் இருமடங்கு அதிகரித்துள்ளது. 
மாரிக்கோ லாபம் இருமடங்கு அதிகரிப்பு


வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த உள்நாட்டு நிறுவனமான மாரிக்கோவின் நான்காம் காலாண்டு லாபம் இருமடங்கு அதிகரித்துள்ளது. 
இதுகுறித்து அந்த நிறுவனம் செபி-யிடம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2018-19 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ரூ.1,609 கோடி வருவாய் ஈட்டியது. 
இது, 2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் ரூ.1,503 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.183 கோடியிலிருந்து இருமடங்கு அதிகரித்து ரூ.405 கோடியானது.
2018-19 முழு நிதியாண்டில் வருவாய் ரூ.6,333 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.7,334 கோடியாக இருந்தது. 
அதேபோன்று, நிகர லாபமும் ரூ.827 கோடியிலிருந்து 37.24 சதவீதம் அதிகரித்து ரூ.1,135 கோடியை எட்டியது என செபி-யிடம் மாரிக்கோ தெரிவித்துள்ளது.
பாராசூட் தேங்காய் எண்ணெய், சஃபோலா பிராண்டுகளில் பொருள்களை விற்பனை செய்து வரும் மாரிக்கோ நடப்பு நிதியாண்டில் மூலதன செலவினம் ரூ.1,25,150 கோடியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com