வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் ரூ.3,500 கோடி திரட்ட திட்டம்

DIN | Published: 05th May 2019 01:31 AM

ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனம் கடன்பத்திரங்களின் மூலம் ரூ.3,500 கோடியை திரட்டவுள்ளதாக சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனம், விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான ரூ.3,500 கோடியை திரட்டவுள்ளது. இதற்கான அனுமதியை நிறுவனத்தின் நிர்வாக குழு வழங்கியுள்ளது. பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் இதர வழிமுறைகள் மூலமாக இந்த நிதியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
 பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த திட்டங்கள் வாயிலான வெளியீடுகளை ஒன்று அல்லது பல கட்டங்களாக மேற்கொண்டு இந்த நிதி திரட்டப்படும். ரூ.3,500 கோடி திரட்டும் இந்த திட்டத்துக்கு ஏற்கெனவே நிர்வாக குழுவின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், தற்போது பங்குதாரர்களின் அனுமதியை நிறுவனம் கோரவுள்ளது என மும்பை பங்குச் சந்தையிடம் ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் தெரிவித்துள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

டி.வி.எஸ். புதிய டயர் அறிமுகம்
இந்தியச் சந்தையில் சாம்சங்கின் நோட் 10 
ஹுண்டாயின் கிராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்
சென்னையில் தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து வர்த்தகம்
ஏ.டி.எம் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு