கோத்ரெஜ் கன்ஸ்யூமர் லாபம் ரூ.935.24 கோடி

உள்நாட்டைச் சேர்ந்த கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் (ஜிசிபிஎல்) மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.935.24 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது, 2017-18 நிதியாண்டின்
கோத்ரெஜ் கன்ஸ்யூமர் லாபம் ரூ.935.24 கோடி


உள்நாட்டைச் சேர்ந்த கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் (ஜிசிபிஎல்) மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.935.24 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது, 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.617.19 கோடியுடன் ஒப்பிடுகையில் 51.5 சதவீதம் அதிகமாகும்.
அதேசமயம், நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.2,560.14 கோடியிலிருந்து 3.06 சதவீதம் குறைந்து ரூ.2,481.72 கோடியானது. 
குறிப்பாக, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையின் மூலம் கிடைக்ககூடிய வருவாய் ரூ.1,369.76 கோடியிலிருந்து 0.9 சதவீதம் குறைந்து ரூ.1,356.09 கோடியானது. அதேசமயம், சர்வதேச அளவில் நிறுவனம் மேற்கொண்ட விற்பனையானது 10 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இந்தோனேஷியா வர்த்தகத்தின் மூலம் கிடைத்த வருவாய் 19.34 சதவீதம் உயர்ந்து ரூ.412.47 கோடியாகவும், ஆப்பிரிக்க வர்த்தகத்தின் வாயிலான வருவாய் 13.15 சதவீதம் அதிகரித்து ரூ.587.09 கோடியாகவும் இருந்தன.  
தேர்தல் காரணமாக நைஜீரியாவில் நிறுவனத்தின் விற்பனையில் தற்காலிக மந்தநிலை ஏற்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் வர்த்தகம் சுணக்க நிலையிலிருந்து படிப்படியாக மீண்டு வருவதாக  மும்பை பங்குச் சந்தையிடம் ஜிசிபிஎல் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com