திங்கள்கிழமை 20 மே 2019

ஹிந்துஸ்தான் யுனிலீவர் வருவாய் ரூ.9,809 கோடி

DIN | Published: 04th May 2019 12:50 AM


ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் ஜனவரி-மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ரூ.9,809 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.9,003 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 8.95 சதவீதம் அதிகம்.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.7,181 கோடியிலிருந்து 8.13 சதவீதம் அதிகரித்து ரூ.7,765 கோடியைத் தொட்டது. நிகர லாபம் ரூ.1,351 கோடியிலிருந்து 13.84 சதவீதம் உயர்ந்து ரூ.1,538 கோடியாக இருந்தது என பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியிடம் ஹிந்துஸ்தான் யுனிலீவர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கருத்துக் கணிப்பு முடிவுகள் எதிரொலி: 1422 புள்ளிகள் உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை 
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு
பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு
அந்நியச் செலாவணி கையிருப்பு 42,005 கோடி டாலராக உயர்வு
பஜாஜ் ஆட்டோ லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு