டிவிஎஸ் மோட்டார் நிகர லாபம் 19 சதவீதம் சரிவு

டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 19.2 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிகர லாபம் 19 சதவீதம் சரிவு


டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 19.2 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளதாவது:
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி கடந்த மார்ச் மாத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் செயல்பாடுகள் மூலம் ரூ.4,384.02 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, கடந்த 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.4,007.24 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம்  தனிப்பட்ட வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.133.8 கோடியை ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.165.5 கோடியுடன் ஒப்பிடும்போது 19.2 சதவீதம் குறைவாகும்.
மதிப்பீட்டு காலாண்டில், ஒட்டுமொத்த இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனை (ஏற்றுமதி உள்பட) 8.89 லட்சத்திலிருந்து அதிகரித்து 9.07 லட்சமாகியுள்ளது. 
கடந்த 2018-19 முழு நிதியாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய் ரூ.18,209.92 கோடியாக இருந்தது. இது,  2017-18 நிதியாண்டில் ரூ.15,518.63 கோடியாக காணப்பட்டது.
வரிக்கு பிந்தைய லாபம் ரூ.662.6 கோடியிலிருந்து 1.13 சதவீதம் உயர்ந்து ரூ.670.1 கோடியானது.
கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனை 33.67 லட்சத்திலிருந்து அதிகரித்து 37.57 லட்சமாக இருந்தது என பங்குச் சந்தையிடம் டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com