கேடிஎம்-இல் 48 சதவீத பங்கு மூலதனம்: பஜாஜ் ஆட்டோவுடன் பைரர் இண்டஸ்ட்ரீஸ் பேச்சுவார்த்தை

கேடிஎம்-இல் கொண்டுள்ள 48 சதவீத பங்கு மூலதனம் தொடர்பாக பஜாஜ் ஆட்டோவுடன் பைரர் இண்டஸ்ட்ரீஸ் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
கேடிஎம்-இல் 48 சதவீத பங்கு மூலதனம்: பஜாஜ் ஆட்டோவுடன் பைரர் இண்டஸ்ட்ரீஸ் பேச்சுவார்த்தை


கேடிஎம்-இல் கொண்டுள்ள 48 சதவீத பங்கு மூலதனம் தொடர்பாக பஜாஜ் ஆட்டோவுடன் பைரர் இண்டஸ்ட்ரீஸ் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செபியிடம் வியாழக்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கேடிஎம் ஏஜி நிறுவனத்தில் பஜாஜ் ஆட்டோவுக்கு 48 சதவீத பங்குகள் உள்ளது. இதனை, கேடிஎம் இண்டஸ்ட்ரீஸ் ஏஜி-க்கு மாற்றுவது தொடர்பாக பஜாஜ் ஆட்டோவுடன் பைரர் இண்டஸ்ட்ரீஸ் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. கேடிஎம் பெரும்பான்மை பங்கு மூலதனத்தை பைரர் குழுமம் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.
பங்குகளை மாற்றும் இந்த திட்டம் தொடர்பான மதிப்பீட்டை பஜாஜ் மற்றும் பைரர் இண்டஸ்ட்ரீஸ் விரைவில் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான இறுதி முடிவுகள் 2019 இரண்டாவது காலாண்டில் மேற்கொள்ளப்படும் என்று பஜாஜ் ஆட்டோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில், கேடிஎம் இண்டஸ்ட்ரீஸ் ஏஜி-யில் 62 சதவீத பங்குகளை ஆஸ்திரியாவைச் சேர்ந்த பைரர் இண்டஸ்ட்ரீஸ் ஏஜி நிறுவனம் வைத்துள்ளது. அதேபோன்று பட்டியலிடப்பட்ட நிறுவனமான கேடிஎம் இண்டஸ்ட்ரீஸ் ஏஜி சுமார் 51.7 சதவீத பங்கு மூலதனத்தை கேடிஎம் ஏஜி-யில் கொண்டுள்ளது.
இந்த பங்கு பரிமாற்ற திட்டம் நிறைவேற்றப்பட்டால், கேடிஎம் இண்டஸ்ட்ரீஸ் ஏஜி-யில் தற்போதுள்ள கேடிஎம்  ஏஜி-யின் பங்கு மூலதனம் 51.7 சதவீதத்திலிருந்து 99.7 சதவீதமாக அதிகரிக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com