கர்நாடக வங்கி உள்பட 3 வங்கிகளுக்கு ரூ. 8 கோடி அபராதம்

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக, தனியார் துறை வங்கிகளான கர்நாடக வங்கி, கரூர் வைஸ்யா வங்கி மற்றும் பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கு ரூ. 8 கோடி அபராதம்
கர்நாடக வங்கி உள்பட 3 வங்கிகளுக்கு ரூ. 8 கோடி அபராதம்

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக, தனியார் துறை வங்கிகளான கர்நாடக வங்கி, கரூர் வைஸ்யா வங்கி மற்றும் பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கு ரூ. 8 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வங்கிப் பணப்பரிவர்த்தனைகளுக்கு தேவையான மென்பொருளை முறையாக பயன்படுத்தாத காரணத்தால் ரூ. 4 கோடி  அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்துள்ளதாக கர்நாடக வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மென்பொருளை முறையாக பயன்படுத்தாத கரூர் வைஸ்யா வங்கிக்கு ரூ. 1 கோடியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. 3 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை 14 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி விதிமுறைகளின் படி, நிதி நிறுவனங்களின் அனைத்து சர்வதேச பணப்பரிவர்த்தனைகளும் ஸ்விப்ட் என்ற மென்பொருளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும். கர்நாடக வங்கியில் ஸ்விப்ட் மென்பொருளை முறையாக பயன்படுத்தாத காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரூ. 14, 000 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி வழக்கில்,  இந்த ஸ்விப்ட் மென்பொருளை தவறாக பயன்படுத்தி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வந்தது. அதையடுத்து அந்த மென்பொருளை சரிவர பயன்படுத்தாத வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முன்னதாக, ரிசர்வ் வங்கியின் பல்வேறு உத்தரவுகளை பின்பற்றாத காரணத்துக்காக தேனா வங்கிக்கு ரூ. 2 கோடியும், பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) மற்றும் ஐடிபிஐ ஆகிய வங்கிகளுக்கு தலா ரூ. 1 கோடியும் ரிசர்வ் வங்கி அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com