2 மாதங்களில் காபி ஏற்றுமதி 13 சதவீதம் உயர்வு

நடப்பு ஆண்டின் ஜனவரி-பிப்ரவரி மாத காலத்தில், காபி ஏற்றுமதி 13.26 சதவீதம் உயர்ந்துள்ளதாக காபி வாரியம் தெரிவித்துள்ளது.
2 மாதங்களில் காபி ஏற்றுமதி 13 சதவீதம் உயர்வு

நடப்பு ஆண்டின் ஜனவரி-பிப்ரவரி மாத காலத்தில், காபி ஏற்றுமதி 13.26 சதவீதம் உயர்ந்துள்ளதாக காபி வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
2019-ஆம் ஆண்டின் ஜனவரி-பிப்ரவரி மாத காலகட்டத்தில் நாட்டின் காபி ஏற்றுமதி, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 13.26 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் காபி ஏற்றுமதி 42,670 டன்னாக இருந்தது. நடப்பு ஆண்டில் இது 48,330 ஆக அதிகரித்துள்ளது.
"ரோபஸ்டா', "அரேபிகா' ஆகிய காபி ரகங்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. "ரோபஸ்டா' ரகத்தின் ஏற்றுமதி அளவு 34,090 டன்னாகவும், "அரேபிகா' ரகத்தின் ஏற்றுமதி அளவு 11,156 டன்னாகவும் உயர்ந்துள்ளது. அதே வேளையில், "இன்ஸ்டன்ட்' காபி ரகத்தின் ஏற்றுமதி 5,704 டன்னிலிருந்து 3,047 டன்னாகக் குறைந்துள்ளது.
இத்தாலி, ஜெர்மனி, ரஷியா ஆகிய நாடுகளுக்கு காபி அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
காஃபி உற்பத்தியில், ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்கி வருகிறது. கடந்த 2017-18 ஆம் ஆண்டு சாகுபடி பருவத்தில் (அக்டோபர் முதல் செப்டம்பர் வரை) காபி உற்பத்தி 3,16,000 டன்னாக இருந்தது. நடப்பு 2018-19 ஆம் ஆண்டுக்கான காபி உற்பத்தி 3,19,500 டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com