பொதுத் துறையைச் சேர்ந்த பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கடன் பத்திரங்கள் மூலம் ரூ.10,000 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
பவர் கிரிட் நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் ஜூலை 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், நிறுவனம் ரூ.10,000 கோடி திரட்டும் திட்டம் குறித்து ஆலோசித்து ஒப்புதல் பெறப்படவுள்ளது என்று பவர் கிரிட் தெரிவித்துள்ளது.
20 கட்டங்களாக கடன்பத்திர விற்பனையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிதி எதற்காக திரட்டப்படுகிறது என்பது குறித்து பவர் கிரிட் நிறுவனம் விரிவாக விளக்கமளிக்கவில்லை. மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் பங்கின் விலை 0.07 சதவீதம் உயர்ந்து ரூ.207.70-ஆக இருந்தது.