பங்குச் சந்தைகளில் ஏறுமுகம்: சென்செக்ஸ் 312 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை 312 புள்ளிகள் அதிகரித்தது.
பங்குச் சந்தைகளில் ஏறுமுகம்: சென்செக்ஸ் 312 புள்ளிகள் அதிகரிப்பு


மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை 312 புள்ளிகள் அதிகரித்தது.
தொடக்கத்தில் சுணக்கத்தைக் கண்ட பங்குச் சந்தை, இந்தியாவில் இந்த ஆண்டுக்கான பருவ நிலை சாதகமாக அமைந்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து சூடு பிடிக்கத் தொடங்கியது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: 39,123 சென்செக்ஸ் புள்ளிகளுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கிய மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம், தொடக்கத்தில் மந்தமாகக் காணப்பட்டது. 350 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ், பிறகு விறுவிறுப்படைந்து இறுதியில் 39,435 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இது, முந்தைய தினத்தைவிட 312 புள்ளிகள் (0.80 சதவீதம்) அதிகமாகும். எரிசக்தி, ஆட்டோமொபைல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்குகள் அதிக அளவில் விற்பனையாகி சென்செக்ஸ் வளர்ச்சிக்குக் கைகொடுத்தன.
இந்தியாவின் சுமார் பாதி இடங்களில் இந்த ஆண்டு நல்ல பருவ மழை பெய்திருப்பதாகவும், நாட்டின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் விவசாயத்துக்குச் சாதகமான பருவ நிலை இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வுத் துறை அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்தது. அதன் காரணமாகவே மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் செவ்வாய்க்கிழமை சரிவிலிருந்து மீண்டு வளர்ச்சியைக் கண்டது.
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும், செவ்வாய்க்கிழமை 99 புள்ளிகள் அதிகரித்து 11,796 புள்ளிகளாக நிறைவடைந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com