சென்செக்ஸ் 85 புள்ளிகள் அதிகரிப்பு

நான்கு நாள்கள் சரிவுக்குப் பிறகு  முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.
சென்செக்ஸ் 85 புள்ளிகள் அதிகரிப்பு


நான்கு நாள்கள் சரிவுக்குப் பிறகு  முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் காணப்பட்ட வலுவான உயர்வு ஆகியவை பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு சாதகமாக இருந்தன. 
இதையடுத்து முதலீட்டாளர்கள்,  உலோகம், எரிசக்தி, தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்களின் பங்குகளை ஆர்வத்துடன் வாங்கி குவித்தனர். இதையடுத்து, பங்கு வர்த்தகம் சூடுபிடிக்கத் தொடங்கியது. 
இருப்பினும், அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தை எதிர்பார்த்து சர்வதேச முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டதால் இந்தியப்  பங்குச் சந்தைகளின் ஏற்றம் கட்டுப்படுத்தப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் எண்ணெய்-எரிவாயு, தொழில்நுட்பம், மின்சாரம், எரிசக்தி, உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண் 1.13 சதவீதம் வரை உயர்ந்தது. 
அதேசமயம், மருந்து, மோட்டார் வாகனம், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண் 0.55 சதவீதம் வரை குறைந்தது.
வேதாந்தா, கோல் இந்தியா, பவர்கிரிட், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்சிஎல் டெக், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை 2.47 சதவீதம் வரை அதிகரித்தன.
அதேசமயம், ஜெட் ஏர்வேஸ் பங்கின் விலை 40.48 சதவீதமும்,  யெஸ் வங்கி பங்கின் விலை 5.94 சதவீதமும் வீழ்ச்சியைக் கண்டன. இதைத் தொடர்ந்து, ஹெச்டிஎஃப்சி நிறுவனம்,  மாருதி சுஸுகி, ஏஷியன் பெயின்ட்ஸ், சன் பார்மா, ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகளின் விலை 2.20 சதவீதம் வரை சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற வர்த்தகத்தில் 300 புள்ளிகள் வரையிலான ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு,  சென்செக்ஸ் 85 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 39,046 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 19 புள்ளிகள் அதிகரித்து 11,691 புள்ளிகளில் நிலைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com