சென்செக்ஸ் 165 புள்ளிகள் அதிகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் 165 புள்ளிகள் அதிகரிப்பு


இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
சர்வதேச அளவில் வர்த்தகப் போர் ஏற்படுவதற்கான அபாயம் அருகி வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.
இந்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவு, அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் காணப்பட்ட ஏற்றம் ஆகியவை பங்குச் சந்தைகளின் உற்சாகத்தை மேலும் ஊக்குவிக்கும் முக்கிய காரணிகளாக அமைந்தன.
இதையடுத்து, பெரும்பாலான முதலீட்டாளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி குவித்தனர்.
இதையடுத்து, உலோகம், எண்ணெய்-எரிவாயு மற்றும் வங்கி துறையைச் சேர்ந்த குறியீட்டெண்கள் 1.33 சதவீதம் வரை அதிகரித்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி, யெஸ் வங்கி, இன்டஸ்இண்ட் வங்கி மற்றும் வேதாந்தா பங்குகளின் விலை 2.71 சதவீதம் வரை உயர்ந்தன. 
இதைத் தவிர, ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஹீரோ மோட்டோகார்ப், டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளும் முதலீட்டாளர்கள் ஆர்வத்தால் விலை அதிகரித்தன.
அதேசமயம், சன் பார்மா, மஹிந்திரா &  மஹிந்திரா, எல் & டி, கோல் இந்தியா மற்றும் ஹெச்யுஎல் பங்குகளின் விலை 3 சதவீதம் வரை சரிவைக் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 165 புள்ளிகள் அதிகரித்து 39,950 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 42 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,965 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com