புதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019

வாகன உற்பத்தியை 18 சதவீதம் குறைத்தது மாருதி சுஸுகி  

DIN | Published: 11th June 2019 01:46 AM

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த மே மாதத்தில் வாகன உற்பத்தியை 18 சதவீதம் குறைத்ததாக தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்நிறுவனம் செபி-க்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
 நிறுவனத்தின் வாகன உற்பத்தி மே மாதத்தில் 18 சதவீதம் குறைக்கப்பட்டது. விற்பனையில் மந்த நிலை காணப்பட்டு வருவதையடுத்து, தொடர்ந்து நான்காவது மாதமாக வாகன உற்பத்தியை குறைக்கும் நிலைக்கு நிறுவனம் ஆளாகியுள்ளது.
 கடந்தாண்டு மே மாதத்தில் நிறுவனம் 1,84,612 வாகனங்களை தயாரித்தது. நடப்பாண்டு இதே காலத்தில் நிறுவனம் 1,51,188 வாகனங்களை மட்டுமே தயாரித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு மே மாதத்தில் வாகன உற்பத்தியானது 18.1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
 இலகு ரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரி தவிர்த்து, இதர மாடல் வாகனங்கள் அனைத்தும் உற்பத்தி குறைப்பு செய்யப்பட்டது.
 ஆல்டோ, ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் உள்ளிட்ட பயணிகள் வாகன உற்பத்தி கடந்த மே மாதத்தில் 1,82,571 என்ற எண்ணிக்கையிலிருந்து 18.88 சதவீதம் குறைந்து 1,48,095-ஆனது.
 சிறிய ரக வாகனங்கள் பிரிவில் உற்பத்தி 41,373-லிருந்து 42.29 சதவீதம் குறைந்து 23,874-ஆனது. வேன்கள் பிரிவில் உற்பத்தி 34.99 சதவீதம் சரிந்து 10,934-ஆக காணப்பட்டது என்று அந்த அறிக்கையில் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
 வாகன விற்பனை சந்தையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை அடுத்து, மாருதி சுஸுகி தனது வாகன உற்பத்தியை கடந்த பிப்ரவரியில் 8 சதவீதமும், மார்ச் மாதத்தில் 20.9 சதவீதமும், ஏப்ரலில் 10 சதவீதமும் குறைக்க வேண்டிய நிலைக்கு ஆளானது.
 கடந்த வாரம், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனக்கு சொந்தமான ஆலைகளில் வாகன உற்பத்தியை 13 நாள்கள் நிறுத்தப்போவதாக அறிவித்தது.
 சென்ற ஏப்ரலில் ஒட்டுமொத்த வாகன விற்பனை எட்டு ஆண்டுகள் காணாத அளவுக்கு 17 சதவீத சரிவை சந்தித்தது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

டி.வி.எஸ். புதிய டயர் அறிமுகம்
இந்தியச் சந்தையில் சாம்சங்கின் நோட் 10 
ஹுண்டாயின் கிராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்
சென்னையில் தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து வர்த்தகம்
ஏ.டி.எம் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு